உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு குருபூஜை, துவார பூஜை, சர்வேத பாராயணம் செய்யப்பட்டு மூலவர் பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாற்றப்பட்டது.இரண்டாம் நாளான கும்ப பூஜை, கலச அபிஷேகம், பூர்ணாஹுதி செய்யப்பட்டு விமானங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியுடன் மூன்றாம் நாள் யாகசாலை பூஜைகள் முடிந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மதியம் 1:30 மணி அளவில் மூலவர் பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமராஜூ தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி