உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நதிகளில் தூய்மையான தண்ணீர் கிடைக்க உதவும் வரையாடுகள்

நதிகளில் தூய்மையான தண்ணீர் கிடைக்க உதவும் வரையாடுகள்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம், நீலகிரி வரையாடுகள் திட்டம், அரும்புகள் தொண்டு அமைப்பு சார்பில் விழிப்புணர்வு கலைப்பயணம் ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், வத்திராயிருப்பு பள்ளிகளில் நடந்தது.சிஎம்.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் சாம் தலைமை வகித்தார். வன உயிரியலாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். இதில் அரும்புகள் தொண்டு நிறுவன நிர்வாகி மதிவாணன் பேசுகையில், உலகளவில் தமிழகம், கேரளாவில் தான் வரையாடுகள் காணப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான வரையாடுகள் இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 1031, கேரளாவில் 670 உட்பட 2 ஆயிரம் வரையாடுகள் மட்டுமே உள்ளது.உலகில் அழியும் நிலையில் வரையாடுகள் இருப்பதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இதனையடுத்து அவற்றை பாதுகாக்க நீலகிரி வரையாடுகள் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. மலை உச்சியில் வசிக்கும் வரையாடுகளால் தான், களக்காடு முதல் மேகமலை வரை மலையில் சோலை காடுகள் உருவாகி தாமிரபரணி, வைகை உட்பட பல ஆறுகளில் தூய்மையான குடிநீர் உற்பத்தியாகி மனித சமுதாயத்திற்கு கிடைக்கிறது. எனவே இதனை பாதுகாப்பது நமது கடமை என்றார்.முகாமில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். நீலகிரி வரையாடுகள் திட்ட வன அதிகாரி சுந்தரேசன், வனத்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ