உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நிரந்தர தீர்வு தேவை

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நிரந்தர தீர்வு தேவை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். நகரில் செண்பக தோப்பு பேயனாறு நீராதாரம் மூலமும், தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறை முதல் அதிகபட்சம் 10 நாட்கள் இடைவெளியில் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 10 நாட்களைக் கடந்தும் குடிநீர் சப்ளை தாமதமானதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தற்போதைய மழையினால் ஒரு வார இடைவெளியில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.இந்நிலையில் ஒவ்வொரு முறையும் குடிநீர் சப்ளை யின் போதும் நகரில் பல்வேறு இடங்களில், மெயின் குழாய்கள் செல்லும் ரோட்டில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி செல்வதை பார்க்க முடிகிறது. இப்பிரச்சனை பல ஆண்டுகளாக நீடிக்கும் நிலையில், இதுவரை தற்காலிக சீரமைப்பு மட்டுமே செய்யப்படுகிறது. இதற்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ