உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வியாபாரி பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

வியாபாரி பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் சஞ்சீவி நாதன் 54. இவர் டூவீலரில் டீ வியாபாரம் செய்து வந்தார். 2017 ஆக.16 மதியம் பூவாணி விலக்கில் டூவீலரில் வரும் போது, பின்னால் வந்த கார் மோதி பலியானார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார், மதுரையைச் சேர்ந்த கார் டிரைவர் யாகின்கான் 48, மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் கார் டிரைவர் யாகின்கானுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி வீரணன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை