உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மது அருந்தி ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

மது அருந்தி ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டினால் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் 6246 வாகன விபத்துக்களில் 70 சதவீதத்திற்கும் மேல் கிட்டத்தட்ட 4500 விபத்துக்கள் மது அருந்தி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 2024 மார்ச் முதல் 2025 மார்ச் வரை மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள் மீது 8 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதில் 3500 வழக்குகளுக்கு மேல் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டு, ரூ. 3. 79 கோடி வசூலிக்கப்பட்டு, 500 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க அவ்வாறு செய்பவர்கள் மீது போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் சட்ட விதிகளின் படி ஓட்டுநர் உரிமம் ரத்து செய்து, குற்ற வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை