உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் துவங்கியது.தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம் 2022ல் துவக்கப்பட்டது. இதன்படி வரையாடுகளின் எண்ணிக்கையை அறிவது, வாழ்விடங்களை பாதுகாப்பது உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கடந்த ஆண்டு முதல்முறையாக தமிழகம், கேரளம் இரு மாநில வனப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் தமிழகத்தில் 1031 வரையாடுகளும், முதுமலை புலிகள் காப்பகத்தில் முக்கூர்த்தி தேசிய பூங்காவிலும், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்திலும் அதிகளவில் வரையாடுகள் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் நடப்பு ஆண்டில் தற்போது நேற்று முதல் துவங்கி ஏப்ரல் 27 வரை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் ஆகிய நான்கு வனசரகங்களில் 28 இடங்களில் 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.இதற்காக நேற்று முன் தினம் இரவே மலை உச்சியில் வனத்துறையினர் தங்கி வரையாடுகளின் நடமாட்டம், காலடித்தடங்கள், இடப்பெயர்வுகள் ஆகியவற்றை கண்காணிக்கத் துவங்கினர்.இதில் மலைகளின் உச்சி பகுதியில் வரையாடுகளின் நடமாட்டம் காணப்பட்டதாகவும், ஏப். 27ல் கணக்கெடுப்பு பணி முடிவடைகிறது. பின்னர் இதனுடைய தரவுகள் புலிகள் காப்பகத் துணை இயக்குனர் அலுவலகம் மூலம் வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வுகள் முடிந்த பிறகு வரையாடுகள் அதிகரித்து உள்ளதா என்பது குறித்து தெரிய வருமென வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி