மேலும் செய்திகள்
நரிக்குடி ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை வருமா
20-Oct-2025
ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு வருவதால் சென்டர் மீடியன் அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் ரோட்டில் இருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் வகையில் இப்பாலம் வளைவாகவும் மூன்று வாகனங்கள் கடந்து செல்லும்படி அகலமாகவும் அமைந்துள்ளது. மேம்பாலத்தின் குறிப்பிட்ட துாரத்திற்கு மேல் சாலையை பிரிக்கும் வெள்ளை கோடு அமைக்கப்படவில்லை. இதனால் வேகமாக முந்தும் கனரக, கார், டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் நிதானம் இன்றி எதிர்வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. அகலமாக அமைத்துள்ள மேம்பாலத்தில் போதிய சென்டர் மீடியன் அமைத்து தடுப்பதன் மூலம் வேகம் எடுக்கும் வாகனங்களை கட்டுப்படுத்தலாம். இது குறித்து குமார்: மேம்பாலம் அகலமாகவும் வளைவுடன் காணப்படுவதால் வேகமாக செல்லும் வாகனங்கள் ஏறி இறங்கும் போது கட்டுப்பாடின்றி மோதி விபத்துக்கு உள்ளாகின்றன. கடந்த இரண்டு மாதத்திற்குள் 15 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மேம்பாலத்தின் நடுவே சென்டர் மீடியன் அமைத்து இரவு நேர ரிப்ளக்டர்கள்அமைத்து பாதுகாக்க வேண்டும்.
20-Oct-2025