உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வை கண்டித்து எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வை கண்டித்து எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

சிவகாசி: டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வை கண்டித்து சிவகாசி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் இரு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகாசி பகுதியில் கட்டுமான பணி, கல்குவாரிகள், நிலத்தை சமன்படுத்துதல், கண்மாய் துார்வாறுதல் உள்ளிட்ட பணிகளில் 100க்கும் மேற்பட்ட மணல் அள்ளும் இயந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன. சிவகாசி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வாகன விலையேற்றம், காப்பீடு, ரோடு வரி, உதிரி பாகங்கள் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இரு நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சிவகாசி அருகே திருத்தங்கல் கல்குவாரி பகுதியில் மண் அள்ளும் இயந்திரம், டோசர், ஹிட்டாச்சி என 100 க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் சிவகாசி பகுதியில் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர விலையேற்றம் காரணமாக மணல் அள்ளும் இயந்திரங்களுக்கான வாடகையை உயர்த்த உள்ளதாகவும் வாகனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ