மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள் /
22-Sep-2025
சிவகாசி: தமிழக அரசின் ஐ.சி.டி அகாடமி சார்பில் மதுரையில் 67 வது பிரிட்ஜ் 25 மாநாடு தமிழ்நாடு திறன் மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு பயணம் என்ற தலைப்பில் நடந்தது. அமைச்சர் தியாகராஜன், டெஸ்சால் செமிகண்டக்டர் இயக்குனர் வீரப்பன், முன்னாள் செயலாளர் விவேக் ஹரி நாராயண், கலந்து கொண்டனர். இதில் பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி தாளாளர் சோலைசாமிக்கு கல்வித் துறையில் புதுமை மற்றும் மாற்றத்தை உருவாக்கியதற்கான எஜுகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது வழங்கப்பட்டது. மேலும் கல்லுாரியின் பேராசிரியர்கள் ரமணி, விமலா, சுபலட்சுமி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. விருதுகளை பெற உதவியாக இருந்த கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி துறைத்தலைவர்கள், பேராசிரியர்களை கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
22-Sep-2025