உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரீடிங் எடுக்க மின்வாரியமே ஸ்மார்ட்போன் வழங்க ஊழியர்கள் வலியுறுத்தல்

ரீடிங் எடுக்க மின்வாரியமே ஸ்மார்ட்போன் வழங்க ஊழியர்கள் வலியுறுத்தல்

விருதுநகர்:''தமிழகத்தில் ரீடிங் எடுக்க மின் கணக்கீட்டாளர்களுக்கு மின்வாரியமே ஸ்மார்ட்போன் வழங்க வேண்டும்'' என மின் ஊழியர் மத்திய அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் முன்னர் எச்.எச்.டி., எனும் கையடக்க கணிப்பொறி கருவி மின் கணக்கீட்டாளர்கள் ரீடிங் எடுத்து வந்தனர். தற்போது ஸ்மார்ட் மீட்டர் மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்மார்ட் போனில் அதனை எடுக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. பணியாளர்கள் சொந்த ஸ்மார்ட்போனில் செயலியை பதிவிறக்கம் செய்து ரீடிங் எடுத்து வருகின்றனர். அதனை வாங்க ரூ.10 ஆயிரம் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தொகைக்கான ஸ்மார்ட் போனில் வசதி குறைவால் சிரமம் உள்ளது என குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதனால் சிலர் கூடுதலாக ரூ.5 ஆயிரம் செலுத்தி வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளதாக கூறுகின்றனர்.தற்போது எச்.எச்.டி., கருவியை நிறுத்தி விட்டதால் ஸ்மார்ட் போனில் ரீடிங் எடுப்பது தான் ஒரே வழி. வாரியமே கொடுத்தால் சம்மந்தப்பட்ட செயலி மட்டுமே இருக்கும். இதனிடையே பணியாளர்கள் பயன்படுத்துவதில் வேறு செயலிகளும் இருப்பதால் ஸ்மார்ட்போனின் ஆயுள் குறைய வாய்ப்புள்ளது.இதுகுறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் சந்திரன் கூறியதாவது: ஸ்மார்ட்போன் மூலம் அளவிடும் போது மீட்டர்களில் கேபிள் மூலம் பொருத்த வேண்டியுள்ளது. சில மீட்டர்கள் ஐந்தரை அடி உயரத்தில் , மேலும் சில 7 அடி உயரத்தில் இருப்பதால் போனை தொங்கவிட்டு மின் கணக்கீடு செய்வதால் அவை கீழே விழுந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. மேலும் இணையத்திற்கும் ஊழியர்களே ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது.ஸ்மார்ட்போன் பழுதானால், நாங்கள் செலவழிக்க வேண்டும் என்கின்றனர். 5 ஆண்டுகள் கழித்து தான் புதிய போன் தருவார்களாம். அந்த போனின் சராசரி ஆயுள் 3 ஆண்டுகள் தான். மின்வாரியத்தை நவீனப்படுத்துவதை முழுவீச்சில் செயலபடுத்த வேண்டும். வாரியமே கொள்முதல் செய்து ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை