மேலும் செய்திகள்
ஆதார் அப்டேட் செய்ய இனி கூடுதல் செலவாகும்
03-Oct-2025
காரியாபட்டி:மதுரை-- துாத்துக்குடி நான்கு வழி சாலை எலியார்பத்தி டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிப்பதால், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு பயணிகள் அதிருப்தி அடைந்தனர். இந்த டோல்கேட்டில் உள்ளூர் வணிக வாகனங்கள் 15 ஆண்டாக ஒருமுறை கடந்து செல்ல ரூ.15, திரும்பி வர ரூ.15 என ரூ.30 சலுகை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது செல்ல ரூ. 115ம், 24 மணி நேரத்திற்குள் திரும்ப வர ரூ.45 என ரூ. 160 வசூலிக்கப்படுகிறது. இதனால் பஸ்களில் மதுரைக்கு அருப்புக்கோட்டையிலிருந்து ரூ. 40 ஆக இருந்ததை ரூ. 50 ஆகவும், காரியாபட்டி முக்கு ரோட்டில் இருந்து ரூ. 30 ஐ 40 ஆகவும், பஸ் ஸ்டாண்டில் இருந்து ரூ. 28 ஐ 35 ஆக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். மகாலிங்கம், விருதுநகர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கூறியதாவது மாதம் ரூ. 9ஆயிரத்து 780 டோல் கட்டணமாக இருந்தது. பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பஸ் இயக்கப்பட்டது. தற்போது ரூ. 63 ஆயிரத்து 825 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 6 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் வேறு வழியின்றி பயணிகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. டோல்கேட் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திருப்பதி, மேலாளர் , டோல்கேட், எலியார்பத்தி செப்டம்பரில் குறிப்பிட்ட வழித்தடங்களில் உள்ள டோல்கேட்டிற்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசு ஒப்புதல் பெற்று, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதை நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இந்த கட்டண உயர்வை நாங்கள் முடிவு செய்வது கிடையாது. உள்ளூர் வணிக வாகனங்களுக்கும், இதர வாகனங்களுக்கும், கட்டண சலுகை 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. சலுகைகள் தொடர்ந்து வழங்குவது குறித்து ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
03-Oct-2025