உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊழியர் சங்க கூட்டம்

ஊழியர் சங்க கூட்டம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் செந்திவடிவேல் தலைமை வகித்தார். வட்டார தலைவராக தவசியானந்தம், செயலாளர் மாரிக்கனி, பொருளாளர் வேல்முருகன், துணைத் தலைவர் கோபால், துணைச் செயலர் உமா முருகேஸ்வரி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அத்தியாவசிய பொருள்களை பாக்கெட் முறையில் வழங்குவது, நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளில் எடை மேடை அமைத்து ரேஷன் கடைகளுக்கு அரிசி, கோதுமை, சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை எடை குறைவின்றி வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ