உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆக்கிரமிப்பில் ஓடைகள்; மழை காலத்திற்குள் சரிசெய்யப்படுமா

ஆக்கிரமிப்பில் ஓடைகள்; மழை காலத்திற்குள் சரிசெய்யப்படுமா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள நீர் நிலைகளின் நீர்வரத்து ஓடைகள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், அடைப்பட்டு போய் உள்ளதை மழைக்காலத்திற்குள் தூர் வார வேண்டியது அவசியமாகிறது. அருப்புக்கோட்டை அருகே கஞ்ச நாயக்கன்பட்டியை சுற்றியுள்ள பல ஊருணிகளிலிருந்து மழை நீர் நிறைந்து அந்தப் பகுதியில் உள்ள 40 அடி ஓடை வழியாக மதுரை -- தூத்துக்குடி நான்கு வழி சாலையை ஒட்டி சென்று சுக்கிலநத்தம், மீனாட்சிபுரம், திருவிருந்தாள்புரம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு மழைநீர் நேரடியாக செல்லும். இந்தப் பிரதான ஓடை தற்போது 2 கி.மீ., வரை ஆக்கிரமிப்பு செய்து மூடப்பட்டுள்ளது. இதே போன்று அருப்புக்கோட்டையில் உள்ள பெரிய கண்மாய், தும்பை குளம், கண்மாய் செவல் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்லும் மழைநீர் வரத்து ஓடைகள் பல இடங்களில் அடைப்பட்டும் ஒரு சில பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் உள்ளன. இதேபோன்று பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சி நகரில் 80 அடி மழைநீர் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது 10 அடியாக உள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட திருநகரம் பகுதியில் பெரிய கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகள், மழைநீர் வரும் ஓடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை காலத்திற்குள் முறையாக தூர்வாரி மழை நீர் சேகரமாவதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை