உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  குழந்தைகள் பாதுகாப்புக்குழு  கூட்டங்களை காலாண்டுக்கு ஒருமுறை நடத்த எதிர்பார்ப்பு 

 குழந்தைகள் பாதுகாப்புக்குழு  கூட்டங்களை காலாண்டுக்கு ஒருமுறை நடத்த எதிர்பார்ப்பு 

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்புக்குழுவின் கூட்டங்களை காலாண்டுக்கொருமுறை நடத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கிராம, வட்டார, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்புக்குழுவின் கூட்டங்களை காலாண்டுக்கொரு முறை கட்டாயம் நடத்த வேண்டும் என்ற அரசு விதி உள்ளது. அக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இந்நிலையில்பல வட்டாரங்களில், கிராமங்களிலும் இந்த குழுக் கூட்டம் பெயரளவிலே நடத்தப்படுகிறது. இன்னும் பலவற்றில் நடத்தப்படாமல் உள்ளது. இது போன்ற கூட்டங்களை அரசு விதிப்படி காலாண்டுக்கு ஒரு முறை அனைத்து உறுப்பினர்கள் பங்கேற்புடன்முறையாக நடத்தவும், மாவட்டத்தில் செயல்படும் அனைத்து குழந்தைகள் இல்லங்களையும் மாவட்ட ஆய்வுக்குழு, குழந்தைகள் நலக்குழுவினர் முன்னறிவிப்பு இல்லாமல் தொடர் ஆய்வுகள் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது. 18 வயதிற்குட்டபட்ட குழந்தைகளுக்கு குழந்தைத் திருமணம் நடக்க உள்ளதாக குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர், சமூக விரிவாக்க அலுவலர்கள், போலீஸ்துறை, சைல்டுலைன் உள்ளிட்ட அலுவலர்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்ற உடன் விரைந்து நடவடிக்கை எடுத்து குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்த தடுப்பு நடவடிக்கைகள் எளிதாகும். எனவே குழுக் கூட்டங்களை காலாண்டுக்கு ஒரு முறை நடத்தி, ஆய்வுகளை முறையாக செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை