உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மதுரைக்கு அரசு மருத்துவமனை வழியாக காரியாபட்டியிலிருந்து பஸ் இயக்க எதிர்பார்ப்பு

மதுரைக்கு அரசு மருத்துவமனை வழியாக காரியாபட்டியிலிருந்து பஸ் இயக்க எதிர்பார்ப்பு

காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களை அரசு மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி, மதுரையில் இருந்து அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பஸ்களும் பஜார் வழியாக சென்று வந்தன. இதில் சில பஸ்களை முக்கு ரோடு, அரசு மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், பைபாஸ் ரோடு, எஸ். கல்லுப்பட்டி வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சில பஸ்களை இந்த வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், வெளியூர் செல்ல பைபாஸ் ரோடு என பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டன. திடீரென எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த வழித்தடத்தில் இயக்குவதை நிறுத்தினர். மருத்துவமனை, மின்வாரிய அலுவலகத்திற்கு வரும் பயனாளிகள் நீண்ட தூரம் நடந்து சென்று வர சிரமப்படுகின்றனர். பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. ஓரிரு நாட்கள் மட்டுமே இயக்கி விட்டு, மீண்டும் நிறுத்தினர். இது தொடர்கதையாக இருந்து வருகிறது. தற்போது மக்கள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு அதிக செலவு செய்து வருகின்றனர். நடந்து செல்ல பலர் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முக்கு ரோடு, அரசு மருத்துவமனை, பைபாஸ் ரோடு வழியாக மதுரைக்கும் அதே வழித்தடத்தில் காரியாபட்டிக்கும் சில பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பால வேலை நடப்பதால் அனைத்து பஸ்களும் முக்கு ரோடு, மருத்துவமனை வழியாக செல்கின்றன. பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ