உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அதிகரித்து வரும் மனநிலை பாதித்தவர்கள் காப்பகத்தில் பராமரிக்க எதிர்பார்ப்பு

அதிகரித்து வரும் மனநிலை பாதித்தவர்கள் காப்பகத்தில் பராமரிக்க எதிர்பார்ப்பு

ராஜபாளையம் ; ராஜபாளையத்தில் பொது இடங்களில் அதிகரித்து வரும் மனநிலை பாதித்து சுற்றிவரும் நபர்களால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அரசு அறிவித்தபடி இவர்களை மீட்டு மனநல காப்பகத்தில் பராமரிக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் மனநிலை பாதிப்பிற்கு உள்ளானவர்களை வீடுகளில் வைத்து பராமரிக்க வழியில்லாதவர்கள் அவர்களை கைவிடும் நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே தன்னை அறியாத சூழலில் யாசகம் பெற்றும் பசியை போக்க முடியாத இவர்கள் மனம் போன போக்கில் பொது இடங்களில் சுற்றி வருகின்றனர். ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோடு, பஸ் ஸ்டாண்டுகள், பொது மருத்துவமனை முன்பு, நிழற்குடைகள், கோயில்கள், பிரபல உணவகங்கள் போன்றவற்றை சுற்றி தங்கள் இருப்பிடமாக வைத்துக் கொண்டு திரிகின்றனர். மனநிலை பாதித்ததால் தகாத வார்த்தைகள் அடிக்கடி பேசுவதுடன், அரைகுறையாக உடைகள் உடுத்தியும் திடீரென ஓடுவது, சாலையில் செல்வோர் மீது கையில் கிடைத்தவற்றை வீசுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இவர்களில் பெண்களும் அடக்கம். இவர்கள் சமூக விரோதிகளால் பாலியல் சீண்டலில் பாதிக்கப்படுவதும் வெளியே தெரிவதில்லை. முதல்வர் சட்டசபையில் அறிவித்தபடி பாதிப்பில் சுற்றித் திரியும் இவர்களை மீட்டு மாவட்டத்தில் செயல்படும் மனநல காப்பகங்களில் சேர்த்து பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை