உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நடுவப்பட்டியில் சேதமான நுாலகம் புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு

நடுவப்பட்டியில் சேதமான நுாலகம் புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு

சிவகாசி: சிவகாசி அருகே நடுவப்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நுாலக கட்டடத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி அருகே நடுவப்பட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுாலக கட்டடம் கட்டப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே நுாலகம் செயல்பட்டு வந்த நிலையில் சேதம் அடைந்து விட்டது. தற்போது கட்டடம் முழுவதுமே சிமெண்ட் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இப்பகுதி சிறுவர்கள் விபரீதம் அறியாமல் சேதமடைந்த கட்டடத்தின் அருகே விளையாடுகின்றனர்.சிலர் தங்களது கால்நடைகளை சேதம் அடைந்த கட்டடத்தின் அருகிலேயே கட்டுகின்றனர். மக்கள் நடமாடும் போது இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.தவிர நுாலகம் செயல்படாததால் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்டி புத்தக வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி