உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலெக்டர் அலுவலக வளாக கிணற்றை மூட எதிர்பார்ப்பு

கலெக்டர் அலுவலக வளாக கிணற்றை மூட எதிர்பார்ப்பு

விருதுநகர்: விருதுநகரில் கலெக்டர் அலுவலக வளாக கிணற்றை இரும்புக் கதவு அமைத்து மூட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விருதுநகரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் ரூ.70 கோடிக்கு கட்டப்பட்டது. ஆறு தளங்களுடன் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்நிலையில் இந்த வளாகத்தில் கிணறு ஒன்று உள்ளது. பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திலும் இதே போன்று கிணறு ஒன்று இருந்தது. அதை இரும்பு கதவு போட்டு மூடிவிட்டனர். அதே போல் தற்போது புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்தும் மூட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த கிணற்றின் குடிநீர் பயன்படுத்தும் அளவுக்கு இருந்தால் மோட்டார் வசதி செய்து புழக்கத்திற்கான நீருக்கு பயன்படுத்தலாம். அல்லது துார்ந்து போயிருந்து அதை துார்வாரலாம். மனு அளிக்க, திட்டங்களில் பயனாளிகளாக வரும் பலர் தங்கள் குழந்தைகளை அழைத்து வருகின்றனர். ஆதலால் முன்னெச்சரிக்கையாக இது போன்ற ஆழமான கிணறுகளை மூடி வைப்பது நல்லது.மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !