உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நாட்டுப்புற கலைஞர்களுக்கு பட்டா வழங்க எதிர்பார்ப்பு

நாட்டுப்புற கலைஞர்களுக்கு பட்டா வழங்க எதிர்பார்ப்பு

காரியாபட்டி: காரியாபட்டியில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை அடைந்தனர். அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.காரியாபட்டியில் 30க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் வசிக்கின்றனர். சீசனுக்கு மட்டுமே வருமானம் கிடைக்கும். மற்ற நேரங்களில் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக இடம், வீடு எதுவும் கிடையாது. வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். வேலை இல்லாத சமயங்களில் வாடகை கொடுக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதையடுத்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டி பல முறை மனு கொடுக்கப்பட்டது. இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் வேதனை அடைந்தனர். காரியாபட்டியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. ஏற்கனவே பலதரப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில் மீதமுள்ள இடங்களை நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை