உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் பட்டாசு கோடவுனில் வெடிவிபத்து

சாத்துாரில் பட்டாசு கோடவுனில் வெடிவிபத்து

சாத்துார்:சாத்துார் அருகே, முத்தாண்டியாபுரத்தில் சட்டவிரோதமாக பழைய தீப்பெட்டி ஆலையில் ஸ்டாக் வைத்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டடம் சேதமடைந்தது.விருதுநகர் மாவட்டம், முத்தாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன், 50. இவருக்கு சொந்தமாக டி.ஆர்.ஓ., லைசென்ஸ் பெற்ற பட்டாசு ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட பேன்சி ரக பட்டாசுகளை, இப்பகுதியில் இவருக்கு சொந்தமான பழைய தீப்பெட்டி ஆலையில் சட்ட விரோதமாக இருப்பு வைத்துள்ளார்.மேலும், இங்கு பட்டாசுக்கான குழாய் தயாரிப்பில் ஈடுபட்டு, அவற்றில் ரசாயன மருந்தும் செலுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திடீரென பேன்சி ரக பட்டாசுகள் வெடிக்கத் துவங்கின. தீப்பெட்டி ஆலையின் கூரை முற்றிலும் சேதம் அடைந்தது.வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, சாத்துார் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், யாரும் காயம் அடையவில்லை. கட்டடம் சேதம் அடைந்தது.விபத்து குறித்து ரகுநாதன் மகன்கள் குருநாதன், மணிசங்கர் ஆகியோரிடம், ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ