உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஐ.டி.ஐ.,ல் சேர அவகாசம் நீட்டிப்பு

ஐ.டி.ஐ.,ல் சேர அவகாசம் நீட்டிப்பு

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: 2025ம் ஆண்டில் அரசு, தனியார் ஐ.டி.ஐ.,ல் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை ஆக. 31 வரை சேர்க்கை நடக்கிறது. எனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதவர்கள், புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அரசு நிர்ணயித்துள்ள 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் ஐ.டி.ஐ.,ல் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தங்களது கல்வி சான்றுகளுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்துக் கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,ல் பயிற்சியில் சேர்வோருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் ரூ.1000, சீருடை, சைக்கிள், பஸ் பாஸ் வழங்கப்படும். இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ