நியாயவிலைக் கடை ஊழியர்கள் சங்க கூட்டம்
விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு நியாயவிலைக் கடை ஊழியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது.மாநில தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செல்வராசு, பொருளாளர் கிருஷ்ணராஜா, தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர் ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.தேர்தல் வாக்குறுதியின் படி பொது வினியோகத் திட்டத்தை தனி துறையாகக்குவது, 3 சதவீத அகவிலைப்படியை சீர்ப்படுத்துவது, ஊதியத்தில் பிடித்தம் செய்த பி.எப். தொகையை நிர்வாக பங்குடன் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்தி பராமரிப்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 1 மாவட்ட தலைகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதுஎன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.