உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வர தாமதம் சாத்துாரில் விவசாயிகள் புறக்கணிப்பு

குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வர தாமதம் சாத்துாரில் விவசாயிகள் புறக்கணிப்பு

சாத்துார் : சாத்துார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில்நடந்த விவசாயிகள் குறை இருக்கும் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.சாத்துார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்ததுகே.முத்துசாமிபுரம், நென்மேனி, பெரிய கொல்லப்பட்டி வெங்கடாசலபுரம் பகுதியில் இருந்து விவசாயிகள் கூட்டத்திற்கு காலை 11:00 மணிக்கு வந்திருந்தனர்.ஆனால் ஆர்.டி.ஓ. சிவக்குமார் மற்றொரு அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் மக்களின் மனுக்கள் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். மதியம் 12:45 மணி வரை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துவங்கப்படவில்லை மற்ற துறை அதிகாரிகள் வந்திருந்த போதும் ஆர்.டி. ஓ., தாசில்தார் என வருவாய்த்துறை அலுவலர்கள் யாரும் இல்லாத நிலையில் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.இதனால் 12 :45 மணிக்கு வந்திருந்த குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளும் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.கே.முத்துச்சாமிபுரம் விவசாயி கே.எஸ்.முருகன் கூறியதாவது: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தாலும் விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளது.இதனால் கூட்டத்திற்கு விவசாயிகள் வர ஆர்வம் காட்டுவதில்லை. மாதம் தோறும் கண்துடைப்பு கூட்டமாகவே நடந்து வருகிறது. அதிகாரிகளுக்கு வேறு அலுவல் இருந்தால் இன்றைக்கே ஏன் இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் மற்றொரு நாள் வைத்திருக்கலாமே ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு இங்கு வரும் விவசாயிகள் குறைகளை கேட்க அதிகாரிகள் வராதது ஏமாற்றம் தருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி