உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் மக்காச்சோள பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் விவசாயிகள் கவலை

சிவகாசியில் மக்காச்சோள பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் விவசாயிகள் கவலை

சிவகாசி: சிவகாசி அருகே புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோள பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சிவகாசியில் 2024ல் 2650 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் அதேபோல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. சித்தம நாயக்கன்பட்டி, புதுக்கோட்டை காளையார் கரிசல்குளம், செவலுார், எரிச்சநத்தம், குமிழங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 1500 ஏக்கருக்கு மக்காச்சோளம் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு உழவு, விதைப்பு, களை எடுத்தல், உரமிடுதல் என ரூ.15 ஆயிரத்திற்கு மேல் செலவாகி உள்ளது. தற்போது மக்காச்சோளம் பயிர் பூ விடும் பருவத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் காட்டுப்பன்றிகள் இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். தங்கராஜ், விவசாயி: மக்காச்சோளம் சாகுபடிக்கு இதுவரையிலும் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவாகியுள்ளது. பூவிடும் பருவத்தில் வந்த நிலையில் காட்டுப்பன்றிகள் மக்காச்சோளத்தை நாசப்படுத்துகிறது. கடந்த ஆண்டு காட்டு பன்றிகளாலும் பயிரில் படைப்புழு தாக்குதலாலும் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். தற்போதும் காட்டுப் பன்றிகள் பயிரை சேதப்படுத்தி வருகிறது. இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி