உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விளைநிலங்களில் சாய்ந்த மின்கம்பங்கள்: விவசாயிகள் அச்சம்

விளைநிலங்களில் சாய்ந்த மின்கம்பங்கள்: விவசாயிகள் அச்சம்

விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் பல விளைநிலங்களில் சாய்ந்த மின்கம்பங்கள் உள்ளன. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஆகவே இந்த மின்கம்பங்களை கண்டறிந்து பலப்படுத்த வேண்டும்.மாவட்டத்தில் விளை நிலங்களில் இலவச மின்சாரத்திற்காக ஆங்காங்கே மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இவை நட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதால் தற்போது அவை சரிந்து வருகின்றன. சில மின்கம்பங்கள் வரப்பை ஒட்டி இருப்பதால் நீரோட்டம் காரணமாகவும் சரிந்து வருகின்றன. கால்நடை, மனிதன் என ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு தான் இழப்பு ஏற்படும்.திருச்சுழி, நரிக்குடி போன்ற வறண்ட கண்மாய்களில் மேடான பகுதிகளிலும் இதே போல் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கனமழையால் பல கண்மாய்கள் நிரம்பி உள்ளன. இவற்றிலும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன.மாவட்ட மின்வாரியம் இதற்கென தனிக்குழு அமைத்து விளைநிலங்கள், நீர்நிலைகளில் வரும் மின்கம்பங்களை கண்டறிந்து அதன் பாதிப்பு தன்மையை ஆராய வேண்டும். சரிந்துள்ள மின்கம்பங்களை பலப்படுத்தி நேராக்கவும், நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கண்மாய்களில் வேறு பாதைகளில் நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை