உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கவுசிகா நதியை மீட்க விவசாயிகள் நடைபயணம் 100 பேர் கைது

கவுசிகா நதியை மீட்க விவசாயிகள் நடைபயணம் 100 பேர் கைது

விருதுநகர்: விருதுநகரில் கவுசிகா நதியை மீட்க நடைபயணம் செய்ய முயன்ற 100 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் கவுசிகா நதி குப்பை மேடாகி, கழிவுநீர் ஓடையாகி வருகிறது. குல்லுார்சந்தை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி அணைகள்மூலம் 17 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன ஆயக்கட்டு இருக்கிறது. தற்போது மூன்று அணைகளின் தண்ணீரும் பாசனத்திற்கு லாயக்கற்றதாகி விட்டது.காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நேற்றுகாலை விருதுநகர் ஆத்துப்பாலத்தில் துவங்கி இருக்கன்குடி அணை வரை நடைபயணம் நடத்த இருந்த நிலையில்போலீசார் தடை விதித்தனர். தடை உத்தரவை மீறி நடைபயணம் சென்ற 100 விவசாயிகளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி