மேலும் செய்திகள்
நாமக்கல் உழவர் சந்தையில் 59 டன் காய்கறி விற்பனை
18-Aug-2025
திருச்சுழி: திருச்சுழி அருகே 3 மாவட்டங்களுக்கு இணைப்பாக உள்ள பரளச்சி பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும், என விவசாயிகள் விரும்புகின்றனர். விவசாயிகள் இடை தரகர்கள் இன்றி தாங்கள் விளைவித்த விளை பொருட்களை நேரடியாக விற்பதற்கு 1999 ல், தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தை துவங்கப்பட்டன. பொருட்களின் விலையை வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் நிர்ணயம் செய்வார் முறையாக பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதையும் கண்காணிப்பர். உழவர் சந்தைகள் பல பகுதிகளில் மூடு விழா கண்டாலும் கூட, பல ஊர்களில் உழவர் சந்தை நன்கு செயல்படுகிறது. திருச்சுழி அருகே பரளச்சி கிராமம் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட எல்லைகளை இணைக்கும் பகுதியில் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி வடக்கு நத்தம், போத்தம்பட்டி, கஞ்சம்பட்டி, தெற்குநத்தம் உள்ளிட்ட 40க்கு மேற்பட்ட கிராமங்களில் தக்காளி, வெண்டை, கத்தரிக்காய், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை 20 கி.மீ., தூரத்தில் உள்ள க.விலக்கு பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கும், அருப்புக்கோட்டைக்கும் கொண்டுவர வேண்டியுள்ளது. போதுமான பஸ் வசதிகளும் இல்லை. விளை பொருட்களை டூவீலர்களில் வைத்து கொண்டு செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, பரளச்சியில் ஒரு உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து பரளச்சியில் உழவர் சந்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
18-Aug-2025