மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
16-Sep-2025
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு, வீட்டுமனை இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா, கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கும், விவசாயம் செய்பவர்களுக்கும் பட்டா, குத்தகை விவசாயத்திற்கு மானியம் வழங்கக்கோரி இரு சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் முருகன், சுந்தரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பூங்கோதை, விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் மனோஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
16-Sep-2025