உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி முன் உள்ள ஊருணியால் விபத்து அச்சம்

பள்ளி முன் உள்ள ஊருணியால் விபத்து அச்சம்

காரியாபட்டி : தண்டியனேந்தலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முன் உள்ள ஊருணியில் தடுப்புச் சுவர் இல்லாததால் பெற்றோர் விபத்து அச்சத்தில் உள்ளனர். விபத்திற்கு முன் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி தண்டியனேந்தலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்திற்கு முன் ஊருணி உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஊருணி நிரம்பி உள்ளது. இதனை ஒட்டியே ரோடு உள்ளது. தடுப்புச் சுவர் இல்லாததால் மாணவர்கள் தவறி விழும் ஆபத்தான நிலை உள்ளது. அதே போல் இந்த ரோட்டில் அடிக்கடி வாகனங்கள் வந்து செல்கின்றன.நிலை தடுமாறி விழுந்தால் அதோ கதிதான். ஏற்கனவே சில குழந்தைகள் தவறி விழுந்து பலியாகின. மாலையில் பள்ளி விடும்போது கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு மாணவர்கள் வெளியில் வருவர். அதுபோன்ற சமயங்களில் இடறி விழும் வாய்ப்பு உள்ளது. ஆபத்தான சூழ்நிலை இருப்பதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். விபத்திற்கு முன் ஊருணியை சுற்றி தடுப்பு சுவர் கட்டவேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை