உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 453 இடைநிற்றல் மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர களஆய்வு

453 இடைநிற்றல் மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர களஆய்வு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்ட கள ஆய்வில் பள்ளிக்கு வராமல் உள்ள 453 இடைநிற்றல் மாணவர்கள் மீண்டும் பள்ளி படிப்பை தொடர அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்ற மாணவர்களில் பள்ளிக்கு வராமல் உள்ள 1495 இடைநிற்றல் மாணவர்கள் மாவட்டம் முழுவதும் கண்டறியப்பட்டனர். இவர்கள் மீண்டும் பள்ளி படிப்பை தொடர்வதற்கான முயற்சிகளை செய்யும் வகையில் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் இன்று முதற்கட்ட கள ஆய்வு செய்தனர்.இதில் அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 8 மாணவர்கள், காரியாபட்டியில் 61, சாத்துாரில் 103, ஸ்ரீவில்லிப்புத்துாரில் 10, வெம்பக்கோட்டையில் 47, சிவகாசியில் 22, ராஜபாளையத்தில் 97, விருதுநகர் ஒன்றியத்தில் 105 என மொத்தம் 453 இடைநிற்றல் மாணவர்களை அரசு அலுவலர்கள் நேரில் சந்தித்து பள்ளிக்கு வராத காரணங்கள் கேட்டு அறிவுரை, ஆலேசானைகளை வழங்கினர். விருதுநகரின் நகர், ஊரகப்பகுதிகளில் 5 இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காக கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை