உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுாற்பாலையில் தீ விபத்து

நுாற்பாலையில் தீ விபத்து

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் நுாற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பஞ்சு பேல்கள் எரிந்து சேதமானது. ராஜபாளையம் மலையடிப்பட்டி அழகை நகரில் குருநாதன் 45, ஓ.இ எனும் பஞ்சு நுாற்பாலை நடத்தி வருகிறார். நேற்று மில்லுக்கு விடுமுறை காரணமாக தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. நேற்று மதியம் 12:30 மணிக்கு பருத்தி பேல்கள் வைத்திருந்த குடோனில் தீ பிடித்து காற்றின் வேகத்தில் அருகே வைத்திருந்த பஞ்சு பேல்களிலும் தீ வேகமாக பரவி தீயில் கருகியதில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து சேதம் ஆனது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையினான வீரர்கள் மூன்று மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ