உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் தீ விபத்து

சிவகாசியில் தீ விபத்து

சிவகாசி: சிவகாசி அருகே காக்கி வாடன்பட்டியில் உள்ள பட்டாசு குழாய் கம்பெனியில் வெல்டிங் பற்ற வைக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது.சிவகாசி அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு காக்கி வாடன்பட்டி அருகே பட்டாசுக்கு தேவையான குழாய் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு நேற்று மாலை தகர செட் அமைப்பதற்காக வெல்டிங் பற்ற வைக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக குழாயில் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் குழாய்கள் எரிந்தது. வெல்டிங் பற்ற வைத்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் வேறு அசம்பாவிதம் ஏற்படவில்லை. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி