உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அட்டை கம்பெனியில் தீ விபத்து

அட்டை கம்பெனியில் தீ விபத்து

சிவகாசி: சிவகாசி அருகே பாறைப்பட்டியில் அட்டை கம்பெனியில் சட்ட விரோதமாக பட்டாசு மிஷின் திரி தயாரித்த போது தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசியை சேர்ந்த சஞ்சீவ்பாபு பாறைப்பட்டி பகுதியில் பட்டாசுகள் பேக்கிங் செய்யும் அட்டை கம்பெனி நடத்தி வருகிறார். அதே கட்டடத்தில் கீழ்தளத்தில் பட்டாசு கடை வைத்துள்ளார். கட்டடத்தில் மாடியில் உள்ள அறையில் அட்டை பெட்டிகளை வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 3:30 மணி அளவில் மாடியில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கீழே உள்ள பட்டாசு கடைக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் இல்லை. விசாரணையில் அட்டை குடோனில் சட்ட விரோதமாக மிஷின் திரி தயாரித்த போது உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி