சதுரகிரியில் மலையில் தீ விபத்து: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
வத்திராயிருப்பு:சதுரகிரி மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சதுரகிரி மலையில் சாப்டூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் காட்டுத்தீ பிடித்து எரிந்தது. வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறையினர் நேற்று அதிகாலை வரை போராடி தீயை அணைத்தனர். எனினும் மாலை வரை புகைமூட்டம் காணப்பட்டது. இதனால் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தரமகாலிங்கம் சன்னதியில் பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். இதற்கிடையில் தீ அணைக்கப்பட்டதால் இன்று காலை நிலவரத்தை பொறுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.