உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையம் மலையில் தீ

ராஜபாளையம் மலையில் தீ

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலையொட்டி புல்பத்தி மலை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதால் வன உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் புல்பத்தி மலை பகுதியில் காட்டு தீ பற்றி புகை மூட்டத்துடன் காணப்பட்டது. வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுக்குள் மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தீயை கட்டுப்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ