உள்ளூர் செய்திகள்

சஞ்சீவி மலையில் தீ

ராஜபாளையம்: ராஜபாளையம் சஞ்சீவிமலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுஉள்ளனர். ராஜபாளையம் நகர் பகுதி நடுவே சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இதை சுற்றி பல்வேறு குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். சில நாட்களாகவெயிலின் தாக்கம்அதிகரித்த நிலையில் மழையில் வளர்ந்துள்ள புதர் செடிகள் காய்ந்து உள்ளது. நேற்று சஞ்சீவி மலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றியது. சருகுகளில் பற்றி காற்றின் வேகம் காரணமாக பல பகுதிகளுக்கும் பரவியது.தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அதை ஒட்டி வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !