உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தீ பாதுகாப்பு பயிற்சி

 தீ பாதுகாப்பு பயிற்சி

திருச்சுழி: திருச்சுழி தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையம் சார்பாக தனியார் பாதுகாவலர்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சுழி நிலைய வளாகத்தில் நடந்த இந்த பயிற்சியில் நிறைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில், முன்னணி தீ யணைபோர் கண்ணன் ,மெக்கானிக் முத்துக்குமார், ராஜாராம், கார்த்திக் ஆகியோர் பயிற்சி வழங்கினர். பயிற்சியில் வீட்டு பராமரிப்பு மற்றும் தீ பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், தீ அணைப்பான்கள் செயல்பாடு, அணைக்கும் முறைகள், சமையல் எரிவாயு தீ, மின்சார சார்ட் சர்க்யூட் தீ, வாகனங்களில் பட்டாசுகளால் ஏற்படும் தீ ஆகியவற்றை அணைக்கும் முறைகள் விளக்கப்பட்டது. கலந்துகொண்ட பாதுகாவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி