உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கெப்பிலிங்கம்பட்டியில் மீன்பிடி திருவிழா

கெப்பிலிங்கம்பட்டியில் மீன்பிடி திருவிழா

காரியாபட்டி: காரியாபட்டி கெப்பிலிங்கம்பட்டியில் நடந்த மீன் பிடி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவருக்கும் தலா 50 கிலோ வரை மீன்கள் பிடிபட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். காரியாபட்டி கெப்பிலிங்கம்பட்டி கண்மாயில் தண்ணீர் நிரம்பி இருந்தது. விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது போக, மீன் வளர்க்க கிராமத்தினர்சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டன. இந்நிலையில் அவை அதிக அளவில் வளர்ந்து, துள்ளி குதித்தன. விவசாயத்திற்கு பயன்படுத்தியதால் தண்ணீரும் ஓரளவிற்கு வற்றியது. இதையடுத்து மீன்பிடித் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிசிண்டி, அச்சங்குளம், துலுக்கன்குளம், அழகிய நல்லூர், மல்லாங்கிணர், வரலொட்டி, தண்டியனேந்தல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். மீன்பிடி திருவிழா துவக்கி வைக்கப்பட்டதும், ஆயிரக்கணக்கானவர்கள் கண்மாயில் இறங்கி மீன் பிடிக்க துவங்கினர். கட்லா, ஜிலேபி, கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் பிடிபட்டன. இதில் கட்லா, கெண்டை மீன்கள் தலா 5 கிலோ முதல் 7 கிலோ வரை இருந்தது. ஒவ்வொருவருக்கும் தலா 50 கிலோ வரை மீன்கள் பிடிபட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை