உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கார் மீது வேன் மோதல் ஐந்து பேர் படுகாயம்

கார் மீது வேன் மோதல் ஐந்து பேர் படுகாயம்

சிவகாசி: சிவகாசியில் கார் மீது லோடுவேன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.சிவகாசி விளாம்பட்டி ரோடு காமராஜபுரம் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் 27. இவரின் மகளுக்கு மொட்டை போடும் விழாவிற்காக அருப்புக்கோட்டை அருகே கல்லுமடத்திற்கு தனது மனைவி மகள் உறவினர்களுடன் காரில் சென்றிருந்தார். விழா முடிந்த பின்பு காரில் தனது உறவினர்களுடன் சாத்துார் ரோட்டில் வரும்போது நாரணாபுரம் புதுார் ரோடு அம்மன் நகரை சேர்ந்த பவுன் பாண்டியன் 33, ஓட்டி வந்த லோடு வேன் கார் மீது மோதியது.இதில் கல்லுமடத்தைச் சேர்ந்த மாரியப்பன், மாரி செல்வம் 20, முத்துராஜ் 43, சண்முகவள்ளி 40, முத்துலட்சுமி 54, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மாரியப்பன் மதுரை தனியார் மருத்துவமனையிலும் மற்றவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை