உள்ளூர் செய்திகள்

உணவுத் திருவிழா

விருதுநகர்: விருதுநகர் அருகே ராமக்குடும்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் தேன்மொழி தலைமையில் நடந்தது. இதில் மாணவர்கள் தயாரித்து கொண்டு வந்த 25 வகையான உணவுகள் இடம் பெற்றது.வட்டாரக்கல்வி அலுவலர் ராமலட்சுமி, வருவாய் ஆய்வாளர் ராணி, தலைமையாசிரியர்கள் சொக்கையராஜ், முருகேசன், உதவி தலைமையாசிரியை ஜான்சிராணி ஆகியோர் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பட்டம்புதுார் ஊராட்சி தொடக்கப்பள்ளி உதவி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் ஒருங்கிணைப்பு செய்தார். ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ், வி.ஏ.ஓ., சுதா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை