உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அச்சுறுத்திய குரங்கை பிடித்த வனத்துறையினர்

அச்சுறுத்திய குரங்கை பிடித்த வனத்துறையினர்

காரியாபட்டி : காரியாபட்டி பிசிண்டியில் மக்களை அச்சுறுத்திய குரங்கை வனத்துறையினர் பிடித்து சென்றதையடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காரியாபட்டி பிசிண்டியில் சில நாட்களாக ஒரு குரங்கு அங்குமிங்கும் சுற்றி திரிந்தது. அது பெண்கள், சிறுவர்களை துரத்தி கடித்து, அச்சுறுத்தி வந்தது. 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். வெளியில் நடமாட முடியாமல் அச்சமடைந்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், கண்டு கொள்ளவில்லை. கலெக்டர் சுகபுத்ரா, கண்ணன் எஸ். பி .,யிடம் அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று வனத்துறையினர் முகாமிட்டு, பல மணி நேரமாக பிடிக்க போராடினர். டிமிக்கி கொடுத்து வந்தது. கிராமத்தினர் உதவியுடன் லாவகமாக பிடித்து கூண்டில் அடைத்து, வனத்துறைக்கு கொண்டு சென்றனர். மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி