முன்னாள் அமைச்சர் நிதியுதவி வழங்கல்
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த நர்சிங் கல்லுாரி மாணவி பவானி மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பவானியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.ஒரு லட்சம் நிதியுதவி அளித்தார். மேலும் வீட்டு புனரமைப்பு பணிக்கு நிதியுதவி அளிப்பதாகவும் உறுதியளித்தார். நிர்வாகிகள், கட்சியினர் உடன் இருந்தனர்.