உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல்

 விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல்

காரியாபட்டி: காரியாபட்டி ஜோகில்பட்டியில் இளைஞர் நலன், விளையாட்டு துறை சார்பில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான பூமி பூஜை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பாம்பாட்டி, மாந் தோப்பு, அழகியநல்லூர், வலுக்கலொட்டி, வரலொட்டி, கிழவனேரி, தோப்பூர், சத்திரம் புளியங்குளம், அல்லாளப்பேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வெற்றிலைமுருகன்பட்டியில் ரூ. 6 .50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, கிழவனேரியில் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை, அல்லாளப் பேரியில் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை