உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை மேம்பால பணி துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை மேம்பால பணி துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை சார்பில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி நேற்று துவங்கியது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் ரயில்வே வழித்தடத்தில் நான்கு வழிச்சாலை மேம்பாலங்கள் அமைக்க வேண்டியுள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சிவகாசி செல்லும் ரயில்வே வழித்தடத்தில் தைலாகுளம் அருகே மேம்பாலம் அமைக்க இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி துவங்கியது. இதற்காக பணிகள் முடியும் வரை தினமும் காலை 9:00 மணி முதல் 12 :30 மணி வரை மின் சப்ளையை நிறுத்தி வைத்து ராட்சத கிரேன்கள் உதவியுடன் இரும்பு கர்டர்கள் துாக்கி வைக்கப்பட்டது. அதிகபட்சம் 10 நாட்களுக்குள் இப்பணி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இதேபோல் ராஜபாளையம் ரயில்வே வழித்தடத்திலும் மேம்பாலம் அமைக்க பணி துவங்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும். பின்னர் அழகாபுரியில் இருந்து ராஜபாளையம் வரை வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ