உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இலவச தீ தடுப்பு பயிற்சி முகாம்

இலவச தீ தடுப்பு பயிற்சி முகாம்

சிவகாசி : சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மீட்புபணி நிலையங்களிலும் வாருங்கள் கற்கலாம் என்னும் அடிப்படையில் மக்களுக்கு கட்டணமில்லா இலவச தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. சிவகாசி தீயணைப்பு நிலையத்தில்அக். 11, 12 ஆகிய இரு நாட்கள் ஒருமணிநேர பயிற்சி என்ற அடிப்படையில் காலை 10:00 முதல் 11:00 மணி வரையும், பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரையும், மாலை 4:00 முதல் 5:00 மணி வரையும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மக்கள், தன்னார்வலர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ,என அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ