உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இலவச வேட்டி, சேலை உற்பத்தி நிதி குறைப்பால் தடுமாற்றம்

இலவச வேட்டி, சேலை உற்பத்தி நிதி குறைப்பால் தடுமாற்றம்

விருதுநகர்: இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 1144 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. இவை மூலம் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நுால் கொள்முதல், நெசவாளர்களின் கூலிக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. தொடர் வேலை வாய்ப்பு திட்டத்தில் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இந்தாண்டு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால் உரிய காலத்தில் நுால், கூலி வழங்க முடியாத நிலை, தொடர் பணி வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கைத்தறி, பெடல் தறி நெசவாளர்களுக்கு முதியோர்களுக்கான சேலை உற்பத்தி செய்து கொடுக்கும் பணியை கொடுத்து விட்டு, கோ- - ஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் இருந்து இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்து வழங்கும் பணியை கொடுக்கலாம் என அரசு முடிவு செய்தது. ஆனால் கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் போதிய நிதி இல்லாததால் இந்த ஆலோசனை ஓரங்கப்பட்டது. இதனால் கைத்தறி, பெடல் தறி நெசவாளர்களுக்கு வழக்கம் போல் உற்பத்திக்கான பணிகள் கொடுக்கப்பட்டது. அதுவும் தொடர் பணியாக இல்லாமல் நுால் வருகைக்கு ஏற்ப உற்பத்தி பணி வழங்கப்படுகிறது. இதனால் நெசவாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை