மேலும் செய்திகள்
பிரதிஷ்டைக்காக விநாயகர் சிலைகள் பயணம்
23-Aug-2025
ராஜபாளையம், : ராஜபாளையம் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வழங்கும் விழா நடந்தது. ஹிந்து முன்னணி அமைப்பில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மகளிர்க்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இல்லந் தோறும் விநாயகர் சிலை வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இதன்படி ராஜபாளையம் பூபால்பட்டி தெரு தனியார் மண்டபத்தில் அப்பகுதி பெண்களுக்கு வீட்டில் வைத்து வழிபடும் விதமாக விநாயகர் சிலை, பூஜை பொருட்கள் சேலை வழங்கப்பட்டது. நகர தலைவர் மகாதேவன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சஞ்சீவி முன்னிலை வகித்தார். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, ஆர் எஸ்.எஸ் நகர் பொறுப்பாளர் ரவிக்குமார், சுப்பிரமணிய ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
23-Aug-2025