உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கண்மாயில் கொட்டப்படும் குப்பை ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரம் பாதிப்பு

 கண்மாயில் கொட்டப்படும் குப்பை ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரம் பாதிப்பு

சிவகாசி: சிவகாசி சித்துராஜபுரம்- இ.டி., ரெட்டியபட்டி ரோட்டில் ஆனையூர் வருவாய்க்கு உட்பட்ட கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் சித்துராஜபுரம், பூலாவூரணி , கொங்கலாபுரம் பேர் நாயக்கன்பட்டி ஆகிய 4 ஊராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. கண்மாயில் 15 ஆழ் துளை கிணறுகள், ஆறு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. கண்மாயில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இரவு நேரத்தில் வாகனத்தில் கொண்டு வந்து செப்டிக் டேங்க் கழிவு நீரையும் இதில் கொட்டுகின்றனர். இதனால் கண்மாயில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. கண்மாய் தண்ணீரில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இங்கிருந்து கிடைக்கும் தண்ணீர் சுகாதாரமற்றதாக வருகின்றது. இதனை மக்கள் பயன்படுத்துவதால் நோய்களுக்கு ஆளாகின்றனர். கண்மாயில் இறைச்சி கழிவுகள், செப்டிக் டேங்க் கழிவு நீர் கொட்டுவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ