குப்பையில் தீ
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் காலை 11:00 மணிக்கு நீதிமன்ற வளாகம் கோதை நகர் பகுதியில் காய்ந்து கிடந்த செடி, கொடிகள் குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தகவலறிந்த தீயணைப்பு துறை அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர் தீயை அணைத்தனர்.