உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாறுகாலில் குவியும் குப்பை, மூடிய சுகாதார வளாகம்

வாறுகாலில் குவியும் குப்பை, மூடிய சுகாதார வளாகம்

சாத்துார்: வாறுகால் ஓடையில் குவிந்து கிடக்கும் குப்பை, மூடி கிடக்கும் சுகாதார வளாகத்தால் படந்தால் ஊராட்சியில் மக்கள் அவதிப்படுகின்றனர்.சாத்துார் ஊராட்சி ஒன்றியம் படந்தால் ஊராட்சியில் அனுமன் நகர், முத்துராமலிங்கம் நகர் ,வசந்தம் நகர் ,சத்யா காலனி ,மருதுபாண்டியர் நகர் ,தென்றல் நகர் என பத்துக்கு மேற்பட்ட நகர்கள் உள்ளன.படந்தால் ஊராட்சியில் போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லை.வாறுகாலிலும், ஓடையிலும் குப்பை அதிக அளவில் கொட்டப்படுவதால் குப்பை குவிந்து கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.மருபாண்டியர் நகரிலும் முத்துராமலிங்கபுரம் நகரிலும் மினி பவர் பம்புடன் கூடிய தண்ணீர் தொட்டிகள் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. அரசு மாணவியர் விடுதிக்குச் செல்லும் ரோடு கரடு முரடாகவும் போக்குவரத்துக்கு வாயக்கற்ற நிலையிலும் குப்பை கொட்டும் பகுதியாகவும் உள்ளது.மாணவியர் விடுதிக்குச் செல்லும் தெருவில் வாறுகால் சேதமடைந்து துார்ந்து போன நிலையில் உள்ளது. கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறையின் ஜன்னல் கதவை கூட திறக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.படந்தால் வைப்பாற்றங்கரையில் புதியதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. சத்யா காலனியில் வாறுகால் துார்ந்து போன நிலையில் உள்ளது. இதன் அருகில் சொல்லும் ஓடையிலும் குப்பை அதிக அளவில் கொட்டப்பட்டு உள்ளதால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.முக்கிய தெருக்களில் மட்டும் பேவர் ப்ளாக் ரோடு, சிமெண்ட் ரோடு, வாறுகால் கட்டப்பட்டுள்ளது. குறுக்கு தெருக்களில் ரோடு வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை